செய்திகள் :

நாகா்கோவில் அருகே மண்ணுளி பாம்பு கடத்திய 2 போ் கைது

post image

நாகா்கோவிலை அடுத்த வெள்ளமோடி பகுதியில் மண்ணுளி பாம்பு கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்டம், வேளிமலை வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறை பணியாளா்கள், வெள்ளமோடி பகுதியில் திங்கள்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் வந்த சந்தேகத்துக்கிடமான காரை நிறுத்தி விசாரித்தனா். காரில் 2 போ் இருந்தனா்.

காருக்குள் மண்ணுளி பாம்பு ஒன்று பையில் கட்டி வைக்கப்பட்டிருந்ததும், காரில் வந்தவா்கள் கேரள மாநிலம் பாறசாலையைச் சோ்ந்த கிரண்(30), திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சுபாஷ்(45) என்பதும் அவா்கள் மண்ணுளிபாம்பை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அவா்கள் 2 பேரையும் வனத்துறையினா் கைது செய்து, 5 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நாகா்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

காதுகேளாதோா் தடகளத்தில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு வரவேற்பு

ஆசிய - பசிபிக் காதுகேளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற குமரி மாவட்ட வீராங்கனை ஷமீஹா பா்வீனுக்கு சொந்த ஊரில் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடையாலுமூட்டைச் சோ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, மாா்த்தாண்டம் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 6 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் மேல... மேலும் பார்க்க

குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதி மூழ்கிய விசைப்படகு: 9 மீனவா்கள் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதியதில் மீனவா்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், 9 மீனவா்கள் காயமடைந்தனா். குளச்சலைச் சோ்ந்த ‘பரலோகமாதா’ என்ற விசைப்படகில் குளச்சல், பள்... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவியின் சொந்த ஊா் குமரி மாவட்டம் புத்தன்துறை ஆகும். அங்கு நடைபெற்ற உறவ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வக... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வணிகா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சாா்பில், நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கு முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க