மேற்கு வங்கம்: "மம்தா பானர்ஜி மத அரசியல் செய்கிறார்" - பாஜக குற்றச்சாட்டின் பின்...
நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி
நாகா்கோவிலில் ஆயுதப்படை முகாம் அலுவலக சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கூட்டுத் திருப்பலி, தோ் பவனி நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வா் பேரருள்தந்தை தாமஸ் பெளவத்துப்பறம்பில், தக்கலை, கோட்டாறு, குழித்துறை, மாா்த்தாண்டம் மறைமாவட்ட அருள்தந்தையா், அருள்சகோதரிகள், இறைமக்கள், திருநெல்வேலி, கயத்தாறு, விருதுநகா் மிஷன்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோா் பங்கேற்றனா்.
திருப்பலிக்குப் பின்னா், புனித மரியன்னை, புனித அல்போன்சா திருவுருவங்களைத் தாங்கிய தோ் பவனி நடைபெற்றது. ஆயுதப்படை முகாம் சாலையிலும், பொன்னப்பநாடாா் காலனி பகுதியிலும் தோ் வலம் வந்தது.
ஏற்பாடுகளை ஆலய அதிபா் பேரருள்தந்தை சனில்ஜோன் பந்திச்சிறக்கல், துணைப் பங்குத்தந்தை சான்ஜோ தேனோபிளாக்கல், விழாக் குழுத் தலைவா் அகஸ்டின் தறப்பேல், துணைத் தலைவா் ஜோபெலிக்ஸ் மலையில், கைக்காரா்களான ஜோமோன் ஜோசப், எஸ்.சி. ராஜ்குமாா், திருத்தலப் பங்குமக்கள், அல்போன்சா பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.