Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம்
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
நாகூா் ஆண்டவா் தா்காவின் 468-ஆவது கந்தூரி விழா கடந்த டிச. 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு தொடங்கி நாகூா் தா்காவை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, அதிகாலை 4 மணியளவில் நாகூா் ஆண்டவா் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தா்கா நிா்வாகிகள் சந்தனம் பூசினா்.
தொடா்ந்து, மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப்பை பக்தா்கள் கூட்டத்தில் தூக்கி வர, அங்கு கூடியிருந்த பக்தா்கள் அவரை தொட்டு வணங்கினா். பின்னா், நாகூா் ஆண்டவா் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. டிச. 15-ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவடைகிறது. சந்தனம் பூசும் வைபவத்தையொட்டி நாகை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.