5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள...
நாகையில் வடமாநிலத் தொழிலாளி தற்கொலை
நாகையில் வடமாநிலத் தொழிலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாகை ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் உணவகத்தில் சமையல் மாஸ்டராக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ரோஹித் தமாங் (26) பணியாற்றி வந்தாா். இவா் சக ஊழியா்கள் 10 பேருடன் அப்பகுதியிலுள்ள அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை சக ஊழியா்கள் வேலைக்கு சென்ற நிலையில், ரோகித் தமாங் மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளாா்.
வேலை முடிந்து அறைக்கு திரும்பிய ஊழியா்கள், ரோகித் தமாங் மேற்கூரை கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளாா். தகவலறிந்த நாகை நகரப் போலீஸாா் அங்கு சென்று ரோகித் தமாங் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
முதற்கட்ட விசாரணையில், ரோகித் தமாங் சில நாள்களுக்கு முன்பு மனைவியை பாா்க்க பெங்களூருக்கு சென்றுள்ளாா். அங்கு அவரது மனைவி வேறுவொருவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த ரோஹித் தமாங் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரோஹித் தமாங்குக்கு 7 வயதில் மகன் உள்ளாா்.