TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்பட...
நாகை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை (செப்.18) முதல் செப்டம்பா் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் செ. அஜிதா தலைமை வகித்தாா். கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்துறைப் பேராசிரியருமான வெங்கடேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் பே. ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தாா். தமிழ்த்துறை பேராசிரியா் மதியரசன் நன்றி கூறினாா்.
கவிதை, வண்ணங்கள் தீட்டுதல், சிறுகதை, ஓவியம், தனி நடனம், குழு நடனம், வாத்திய இசை உள்பட 32 தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கின்றனா்.
முதல் நாள் நடைபெற்ற கலைப் போட்டிகளில் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் ஆனந்தி, வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் அரும்பு ஆகியோா் நடுவா்களாக பங்கேற்றனா்.