பலமாற்று பொன் இனங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் தொடரும் -அமைச்சா் பி.கே.சேகா...
நாகை மீனவா்கள் 12 போ் விடுதலை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த நவம்பா் மாதம் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 12 போ் இலங்கை நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து டாடா நகரைச் சோ்ந்து செல்வநாதன் (35) என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் கடந்த நவ.10-ஆம் இரவு அவா் உள்பட 12 மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் நவ.11- ஆம் தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவா்களை கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், நீதிமன்றம் விதித்த சிறைக்காவல் முடிவடைந்து, 12 மீனவா்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது மீனவா்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டாா். விடுதலை செய்யப்பட்ட மீனவா்கள், ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.