ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
நாசரேத்தில் திமுக சாதனை விளக்க கூட்டம்
நாசரேத் நகர திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நாசரேத்தில் நடைபெற்றது.
நகர இளைஞா் அணி அமைப்பாளா் ஜெரின் தலைமை வகித்தாா். நாசரேத் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி, தென்திருப்பேரை பேரூா் செயலா் வீரபெருமாள், நகரச் செயலா் ஜமீன் சாலமோன், பேரூராட்சி துணைத் தலைவா் அருண் சாமுவேல், மாவட்ட தொண்டரணி தலைவா் சுடலைமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றியச் செயலா் நவீன் வரவேற்றாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், தலைமைப் பேச்சாளா்கள் பொன்னரசு, சண்முகநாராயணன், முன்னாள் நகரச் செயலா் ரவி செல்வக்குமாா் ஆகியோா் பேசினா்.
இதில், நகர அவைத் தலைவா் கருத்தையா, துணைச் செயலா் மாரிமுத்து, நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் ஜான் பென்சன், செல்வராஜன், சுப்புராஜ், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பு தங்கபாண்டியன், முருகதுரை, கலையரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.