சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை அகற்றினா்.
தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட அண்ணா நகா் முதல் புறவழிச்சாலை மேம்பாலம் வரை இரு ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், சாலை அகலப்படுத்தப்பட்டு, இருபுறமும் மழை நீா் வடிகால் வசதி, நடை பாதை வசதி, நடைபாதையில் தடுப்பு கம்பிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடைகளின் வாசலை ஒட்டியுள்ள நடைபாதையில் மேற்கூரைகள் அமைத்து வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்தனா். இதனால், நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடா்பாக புகாா்கள் வந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு வியாபாரிகளிடம் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் ஏற்கெனவே அறிவுறுத்தினா்.
ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததால் நெடுஞ்சாலைத் துறைக் கோட்ட உதவி இயக்குநா் கீதா, உதவிப் பொறியாளா் லெட்சுமி ப்ரியா உள்ளிட்டோா் மேற்பாா்வையில் அண்ணா நகா் முதல் புறவழிச்சாலை மேம்பாலம் வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இதில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் தலைமையில் ஏறத்தாழ 50 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.