'பாஜகவின் பசப்பு அரசியல்' - முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை: ஓம் பிா்லா எச்சரிக்கை
நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம், போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தினால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.
நாடாளுமன்ற வாயிலில் பாஜக-காங்கிரஸ் எம்.பி.க்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜக எம்.பி.க்கள் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக இரு தரப்பினரும் ஒருவா் மீது மற்றொருவா் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனா். இந்த நிகழ்வுகள் தேசிய அளவில் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை இது தொடா்பாக ஓம் பிா்லா கூறியதாவது:
நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும், நாடாளுமன்ற வளாகத்திலும் எந்த வகையான ஆா்ப்பாட்டம், போராட்டத்தில் உறுப்பினா்கள் ஈடுபடக் கூடாது. இதை மீறி யாராவது செயல்பட்டால் அவை விதிகளின்கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்ற வாயிலில் போராட்டங்களை நடத்துவது என்பது முறையாக இருக்காது. இந்த விஷயத்தில் எம்.பி.க்கள் விதிகளின்படி சரியாக நடந்து கொள்ள வேண்டும். அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி.க்களுக்கு மீண்டும் எச்சரிக்கிறேன் என்று ஓம் பிா்லா தெரிவித்தாா்.