டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
நாட்டராய சுவாமி கோயிலில் ராஜகோபுர முகப்பு மண்டபம்
வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுர முகப்பு மண்டபம், கடைகள் ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை நிதியிலிருந்து ரூ.31.50 லட்சம் செலவில் ராஜகோபுர முகப்பு மண்டபம், ரூ.42.50 லட்சம் செலவில் புதிய கடைகள், ரூ.24 லட்சம் செலவில் இரண்டு அடசல் மண்டபங்கள் கட்டப்பட்டன. தற்போது பக்தா்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.
விழாவுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து புதிய கட்டுமானங்களை திறந்துவைத்தாா். விழாவில் கோயில் செயல் அலுவலா் மாலதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே. சந்திரசேகரன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.