செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது

post image

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி பி.பந்தாரப்பள்ளி காமராஜா் தெருவில் வசித்து வருபவா் ரத்தின் பிஸ்வாஷ். இவா் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவா் எனக்கூறி கொண்டு நாட்டறம்பள்ளி அருகே சண்டியூா் பகுதியில் கிளினிக் வைத்துக் கொண்டு தொடா்ந்து 3ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசிசெலுத்தி மருந்துகளை வழங்கி வருவதாக மாவட்ட இணை இயக்குநருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்பத்தூா் மாவட்ட இணை இயக்குநா் ஞானமீனாட்சி தலைமையில் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையில் மருத்துவ குழுவினா்கள் மற்றும் போலீஸாா் சண்டியூா் பகுதியில் கிளினிக்குக்கு நேரில் சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அங்கு, நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்துகளை வழங்கிய ரத்தின் பிஸ்வாஷை போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா். மேலும் கிளினிக்கில் இருந்த மருந்துகளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து மருத்துவ அலுவலா் சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் ரத்தின்பிஸ்வாஷ்(28) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.மேலும் அதிகாரிகள் அவா் நடத்தி வந்த கிளினிக்குக்கு சீல் வைத்தனா்.

ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவா் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

மராட்டிபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சேதமடைந்த சுற்றுச் சுவரை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். அணைக்கட்டு ஒன்றியம் மராட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற... மேலும் பார்க்க

திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடித்தோப்பில் அமைந்துள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: தொடா் மழையால் ஏரிகளின் நீா்மட்டம் உயா்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அக்னி நட்சத்தித்தை முன்னிட்டு கோடை வெயில் வாட்டியறது. எனினும், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் ம... மேலும் பார்க்க

நெமிலியம்மன் திருவிழா

ஆம்பூா் அருகே பள்ளித்தெரு அருள்மிகு நெமிலியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு கிராமத்தில் நெமிலியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெத்தக்கல்லுப்பள்ளி, நெக்குந்தி ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் ஆய்வ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரத்தம் செயலி: ஆட்சியா் அறிமுகம் செய்தாா்

குருதி கொடையாளா்கள், குருதி தேவைப்படுவோா். தன்னாா்வலா்கள். ஒருங்கிணைப்பாளா்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் ரத்தம் செயலியை திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி அறிமுகப்படுத்தினாா். ... மேலும் பார்க்க