செய்திகள் :

நாட்டுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நேரு! -ராகுல் காந்தி அஞ்சலி

post image

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்களும் நேருவுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்தநிலையில், நேருவின் நினைவு நாளையொட்டி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “ஒருங்கிணைந்ததொரு வலுவான இந்தியா என்ற கனவுடன் சுதந்திர இந்தியாவுக்காக வலுவானதொரு அடித்தளத்தை தமது தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய தலைமைப் பண்பால் அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்றவர் நேரு.

சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை அமைப்பதற்கான அன்னாரது பங்களிப்பு மதிப்பிற்கரியது.

’இந்தியாவின் ஜவாஹர்’ சித்தாந்தங்கள் நமக்கு வழிகாட்டியாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க