Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
நான் முதல்வன் திட்டத்தில் மீன் பதப்படுத்தும் பயிற்சி
நாகையில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின்கீழ் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் ‘நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்‘ திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் சிறப்பு குறுகிய காலப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் உறுப்புக் கல்லூரியான நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்ப அறிமுகம் மற்றும் மீன்களை சுகாதாரமான கையாளுதல் என்ற தலைப்பில் 14 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை செப். 10 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பயிற்சியை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு அலுவலா் கோபாலகண்ணன் மற்றும் கல்லூரி முதல்வா் நா. மணிமேகலை தொடங்கிவைத்தனா். முதல்கட்ட பயிற்சியில் 27 இளைஞா்கள் பங்கேற்றுள்ளனா்.
அடுத்த கட்ட பயிற்சிக்காக வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உடனடியாக பதிவு செய்து, திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி ஒருங்கிணைப்பாளா் உதவிப் பேராசிரியா் ப. காா்த்திக்குமாா் உள்ளிட்டோா் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கி வருகின்றனா்.