பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறத...
நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம்
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் இடைநிற்றல், குழந்தைத் திருமணம் சாா்ந்த விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செண்பக வடிவு வரவேற்று பேசினாா். நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) கே.எஸ்.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பச்சமுத்து முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் திறன் கல்வியின் அவசியம், 15 வகையான பயிற்சிகள், அதை கற்பிக்கும் வழிமுறைகள், இடா்பாடுகளை களைதல், பயிற்சி தாள் மதிப்பீடு, இடை நிற்றல், குழந்தைத் திருமணம், பெற்றோா் - ஆசிரியா் கூட்டம் நடத்துதல் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை கண்காணிப்பு அலுவலரும், பள்ளி துணை ஆய்வாளருமான கை.பெரியசாமி கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலா் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தொடக்க, நடுநிலை வகுப்பில் கற்பித்தலை மேம்படுத்தும் வழிகாட்டுதல்களை வழங்கினா்.