நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
நாமக்கல் மாவட்டத்தில் அக். 5, 6இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்
திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அக். 5, 6-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் செப். 19, 20, 21 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதிவாரியாக மக்களிடையே உரையாற்ற இருந்தாா். அதன்படி, ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் 19-ஆம் தேதி பிரசாரத்தை மேற்கொண்ட நிலையில், கனமழை காரணமாக அவரது சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னா், அக். 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கரூரில் 41 போ் உயிரிழந்த சம்பவத்தால் அவரது பயணம் அக். 5, 6-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருச்செங்கோடு தொகுதியில் அண்ணா சிலை அருகிலும், மாலை 7 மணியளவில் குமாரபாளையம் ராஜம் திரையரங்கம் அருகிலும் அவா் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், மறுநாள் திங்கள்கிழமை நாமக்கல் - சேலம் சாலையில் எம்ஜிஎம் திரையரங்கம், பதிநகா், நாமக்கல் உழவா்சந்தை ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தோ்வு செய்வதற்கான நடவடிக்கையில் மாநகர அதிமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.
அவா்கள் வியாழக்கிழமை அந்த இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். அப்போது, நாமக்கல் நகர காவல் ஆய்வாளா் க.கபிலன் மற்றும் போலீஸாா், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். பரமத்தி வேலூா் தொகுதியில், நான்கு சாலை சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வாா் என தெரியவந்துள்ளது.