நாய்கள் கடித்ததில் சிறுவன் காயம்
பழனியில் நாய்கள் கடித்ததில் சிறுவன் காயமடைந்தாா்.
பழனி கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதாம்உசேன். இவரது மகன் ரைஹான் (4). இவா் திங்கள்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இரண்டு தெருநாய்கள் அவரைத் துரத்தின.
அப்போது அந்த நாய்கள் கடித்ததில் முகத்திலும், காதிலும் ரைஹான் காயமடைந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் நாய்ளை துரத்தியடித்தனா். பிறகு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரைஹானுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே பழனி நகரில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றில் பலவும் கடும் நோய்தொற்றுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.