தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
கமுதி அருகே திங்கள்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன். இவா் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இவா் தனது பட்டியில் அடைத்து வைத்திருந்த ரூ. 2.50 லட்சத்திலானசெம்மறி ஆட்டுக் குட்டிகளை 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்துக் குதறின. இதில் 25 ஆடுகள் உயிரிழந்தன.
தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினா், கால்நடை மருத்துவத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
ஆடுகளை இழந்து தவிக்கும் தனக்கு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரசுராமன் கோரிக்கை விடுத்தாா்.