நாய் அடித்துக் கொலை: காவல்துறை விசாரணை
தஞ்சாவூரில் நாயை சிலா் கற்களால் அடித்துக் கொன்றதாக விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வி.என்.டி. நகரில் தெரு நாயை ஆண், பெண், 4 சிறுவா்கள் என மொத்தம் 6 போ் பெரிய கற்களை எறிந்து தாக்குவது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவுகிறது.
இதனால் பலத்த காயமடைந்து உயிரிழந்த நாய் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் விலங்குகள் நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.