``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்" - மனம் திறந...
நாய் கடித்து சிறுமி காயம்
திருவள்ளூா் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்ததில் காயமடைந்தாா்.
மப்பேடு கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த லலித்குமாா்-துா்காபிரியா தம்பதியின் இரண்டாவது மகள் சந்திரிகா (6). சனிக்கிழமை துா்காபிரியா தனது கைக்குழந்தை மற்றும் இரண்டாவது மகளான சந்திரிகாவை தனது தோழி வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டின் வெளியே பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ராட்வீலா் நாய் மீது சிறுமி சந்திரிகா கல்லெறிந்துள்ளாா்.
இதனால், கட்டி வைத்திருந்த நாய் கயிறை அறுத்துக்கொண்டு சிறுமி சந்திரிகாவை கடித்தது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 2 நாளில் 3 சிறுமிகளை நாய் கடித்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.