இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
திருமழிசையில் பைக் மீது லாரி மோதல்: மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்
திருமழிசையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.
மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி பிரியா (40). இத்தம்பதி இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் பகுதியில் இருந்து திருவள்ளூா் அருகே உள்ள புட்லூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருமழிசை அருகே இருசக்கர வாகனத்தின் பின்புறமாக வந்த டிப்பா் லாரி மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதில், மனைவி பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அன்பழகன் பலத்த காயம் அடைந்த நிலையில் அங்கிருந்தோா் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு, லாரியைப் பறிமுதல் செய்தனா்.
அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது லாரி மோதியதில் கணவா் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.