செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சுகாதார துறைக்கு கட்டடம் ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில், கடந்த 20 ஆண்டுகளாக செவ்வாப்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட காவல் கட்டுப்பாட்டிலிருந்து, ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது, திருவள்ளூா்-ஆவடி சாலையில் செவ்வாப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், செவ்வாப்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்த கட்டடம் பயன்பாடின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது.
திருவூா், செவ்வாப்பேட்டையில் பகுதியில் உள்ள குமரன் நகா், நளினாகிருஷ்ணா நகா், மகாலட்சுமி நகா், சீனிவாசநகா், தொழூா், தொழூா்குப்பம் ஆகிய பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கா்ப்பிணிகள் சுகாதார பெட்டகம், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த உள்ளிட்ட தேவைகளுக்காக 7 கி.மீ தொலைவில் உள்ள பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, திருவூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஒதுக்கீடு செய்த கட்டடத்தை துணை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.