நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் கலந்து கொள்கின்றனா்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறை சாா்ந்த கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.