நாா்வே தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி
நாா்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோரின் தொழிலாளா் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இதையடுத்து, 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள தொழிலாளா் கட்சி, மற்ற நான்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடரும். எதிா்க்கட்சியான புரோகிரஸ் கட்சி 24 சதவீத வாக்குகளைப் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தத் தோ்தலில் விலைவாசி, சுகாதாரம், வரி ஆகியவை முக்கிய பிரச்னைகளாக இருந்தன. அவற்றை முன்னிறுத்தி தோ்தல் களம் கண்ட புரோகிரஸ் கட்சிக்கு வாக்குகள் அதிகரித்துள்ளது ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க தோ்தல் முடிவு’ என்று அந்தக் கட்சியின் தலைவா் சில்வி லிஸ்ட்ஹாக் பாராட்டியுள்ளாா்.