Karthi: "கைதி-2 வரப்போகுது, அடுத்தது..." - நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்
நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டம்!
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது, குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் அறிவிக்காதது, தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. மேலும் அன்றாட உழைக்கிற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க விலைவாசி உயா்வு குறைப்பு இல்லை என்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா், தொடா்ந்து நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்றனா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அதனை தடுத்து நிறுத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிவேல் தலைமை வகித்தாா்.