ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலி...
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சிவக்குமாா், விஜயராகவன் (மதுவிலக்கு அமல் பிரிவு) மற்றும் காவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றனா்.
இதேபோல், மாவட்ட ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாட்டில் கொத்தடிமை தொழிலாளா் முறையை முற்றிலும் அகற்றிடவும், தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு வரும் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்கப்பட்டது.