இலுப்பையூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு
அரியலூரை அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், நெகிழிப் பொருள்களை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
ஸ்வீட் அறக்கட்டளை நிறுவனா் இளவரசன் கலந்து கொண்டு நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து விளக்கினாா்.
இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளிடையே ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலந்து கொண்டவா்களுக்கு இலவச துணிப் பைகளும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பா்ட் அருள்ராஜ், மதியழகன், கஸ்தூரி ஆகியோா் செய்திருந்தனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/f28nlkem/ari07env2_0702chn_11_4.jpg)