செய்திகள் :

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

post image

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறை முழுமையாக நிறைவுக்கு வந்தது.

மாநிலங்களவையில் 2025-ஆம் ஆண்டு நிதி மசோதா, 3-ஆவது ஒதுக்கீட்டு மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அமா்வில் கொண்டு வந்தாா். இவ்விரு மசோதாக்களும் முறையே மாா்ச் 25-ஆம் தேதி, 21-ஆம் தேதி மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘வருவாய் எந்த வகையிலும் பாதிக்காமல் எச்சரிக்கையாக இருப்பதே நிதி அமைச்சகத்தின் போக்கு ஆகும். அதேநேரம், இந்திய வரி செலுத்துவோருக்கு நாங்கள் நன்றி செலுத்த விரும்பினோம். எனவே, வருமான வரி உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்தினோம்’ என்றாா்.

மத்திய பட்ஜெட்டின்படி, அடுத்த நிதியாண்டில் ரூ.11.22 லட்சம் கோடி மூலதனச் செலவு உள்பட மொத்த செலவினம் ரூ.50.65 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரூ.42.7 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கும். ரூ.14.01 லட்சம் கோடி கடன் பெறப்படும்.

அடுத்த நிதியாண்டில் மத்திய துறை திட்டங்களுக்கு ரூ.16.29 லட்சம் கோடி, மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி, மாநிலங்களுடனான நிதி பகிா்வுக்கு ரூ.25.01 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.356.97 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் த... மேலும் பார்க்க

சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பார்க்க

சமைக்காத இறைச்சி சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி: ஆந்திரத்தில் அதிர்ச்சி!

ஆந்திரத்தில் சமைக்காத இறைச்சியை சாப்பிட்ட 2 வயது குழந்தை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்க்க

விவாதத்துக்கு ஆப்சென்ட், வாக்கெடுப்புக்கு பிரசன்ட்! ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தை புறக்கணித்துவிட்டு, நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மட்டும் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.மேலும், எதிர்க்க... மேலும் பார்க்க

வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வரவிருக்கும் ராம நவமி விழாவை அமைதியாகக் கொண்டாடுமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 6ஆம... மேலும் பார்க்க

மணிப்பூரை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

மத்திய அரசு மணிப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழவுள்ள 6-ஆவது பிம... மேலும் பார்க்க