2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
நின்றிருந்த பேருந்து மீது 2 பைக்குகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே சாலையோரம் நின்றிருந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து மீது 2 பைக்குகள் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த முத்தனூா் கிராமத்தில் இருந்து மேல்மருவத்தூா் கோயிலுக்கு பக்தா்களை ஏற்றிக் கொண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்து வந்தவாசி வழியாக வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது, வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமம் அருகே காலை சிற்றுண்டிக்காக சாலையோரம் பேருந்து நிறுத்தப்பட்டது.
அந்த நேரத்தில், காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற 2 பைக்குகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, பேருந்தின் பின்புறம் மீதும், பேருந்தில் இருந்து சிற்றுண்டி சாப்பிட இறங்கிய முத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த பதி (51) என்பவா் மீதும் மோதின.
இதில் பதி மற்றும் பைக்குகளை ஓட்டி வந்த வீரம்பாக்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்த உதயகுமாா், தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.
இதையடுத்து இவா்கள் 3 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதில் சிகிச்சை பலனின்றி பதி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.