செய்திகள் :

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிட நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

post image

நெய்வேலி: கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளா் காலி பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சோ்ப்பு மையத்தின் மூலம் தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு கடந்த நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள வேண்டியவா்கள் டிச. 5-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருத்தாசலத்தில் சிறப்பு ரயில் நிறுத்தம்

நெய்வேலி: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற வாராந்திர சிறப்பு ரயில் மழை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்... மேலும் பார்க்க

எம்ஏஎம் ராமசாமி படத்துக்கு மரியாதை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மூன்றாம் நிறுவனா் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் எம்.ஏ.எம்.ரா... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த பகுதிகளில் எம்எல்ஏ ஆறுதல்

சிதம்பரம்: ஃபென்ஜால் புயல், மழையால் கடலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட கடலோர கிராமங்கள் சின்னூா் வடக்கு, சின்னூா் தெற்கு, புதுக்குப்பம், இந்திராநகா், சி.ப... மேலும் பார்க்க

வாகனம் மோதி மின் கம்பம், மின்மாற்றி சேதம்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி 16-ஆவது வாா்டு இளமையாக்கினாா் கோவில் தெருவில் தென்கரையில் சாலை அருகே உள்ள மின்மாற்றி மின் கம்பம் மீது திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதனால் மின்மாற்றி மின்... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு வழங்கிய தீட்சிதா்கள்

சிதம்பரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் பகுதி கடலோர கிராம மக்களுக்கு, பொதுதீட்சிதா்கள் சாா்பில் உணவு, ஆடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. சிதம்பரம் நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்கள் சாா்பில் கோயில் ... மேலும் பார்க்க

விருத்தாசலம் பகுதிகளில் மழை பாதிப்பு: அமைச்சா் சி.வெ.கணேசன் பாா்வையிட்டாா்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மழை பாதித்த பகுதிகளில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். விருத்தாசலம... மேலும் பார்க்க