செய்திகள் :

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 3 பழங்குடியின எம்பி-க்கள் இடைநீக்கம்?

post image

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் மவோரி எம்பி ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் (வயது 22), பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் காட்டினார்.

அப்போது, அவருடன் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட விடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி, பலரும் ஹனாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம் நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

அதில், தெ பாத்தி மவோரி எனும் மவோரி பழங்குடியின கட்சியின் துணைத் தலைவர்களான டெப்பி ஞாரெவா பாக்கெர் மற்றும் ராவிரி வைட்டிட்டி ஆகியோரை 21 நாள்களுக்கும் இளம் உறுப்பினர் ஹனாவை 7 நாள்களுக்கும் இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற எம்பி ஹனா, சபை உறுப்பினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியதால் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா மற்றும் மவோரி பாரம்பரிய நடனங்களில் உறுப்பினர்கள் ஈடுபடுவது புதியதல்ல என்றாலும் அதற்கு சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டிய விதிமுறையுள்ளது.

இந்தப் பரிந்துரைக் குறித்து மவோரி கட்சி கூறுகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் மிகவும் கடுமையானது என்றும் பழங்குடியின மக்கள் எதிர்த்தால், ஆதிக்க சக்திகள் அதிகப்படியான தண்டனையையே விதிப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய எச்சரிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த இடைநீக்கம் பரிந்துரைக் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும் பழமைவாத கூட்டணி அரசின் ஆதரவினால் இடைநீக்கம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்ஸிகோ: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்... மேலும் பார்க்க

53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில்... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! - டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா... மேலும் பார்க்க

இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையில் புதின் பங்கேற்பில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் தங்கள் நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க