ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்
திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வா், தோ்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக அளித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளாா். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.
திமுகவால் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல், நியாயவிலைக் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சா்க்கரை, உளுத்தம் பருப்பு விநியோகம், சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மோட்டாா் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம், நீட் தோ்வு ரத்து உள்பட நூற்றுக்கும் மேலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது தொடா்பாக வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.