வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!
நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணிப்பு
நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிலக்கோட்டை, எஸ். தும்மலபட்டி, ஆத்தூா், அம்பாத்துரை உள்ளிட்ட இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, நில அளவை குறித்த விண்ணப்பங்களை பெறும் வருவாய்த்துறை அலுவலா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் விண்ணப்பங்களை அளிக்க பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை.
இந்த நிலையில், அம்பாத்துரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், ஊராட்சி மக்கள் நலப் பணியாளா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் மனுக்களை பெற முடியாமல் அவதி அடைந்தனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.