நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிபணியாளா்கள் மனு
பொன்னமராவதியில் ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேல்நிலைத் தேக்க தொட்டி பணியாளா்கள் பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசனிடம் மேல்நிலைநீா்த்தேக்க தொட்டி பணியாளா்கள் மற்றும் தூய்மை காவலா்கள் சங்க மாநில துணைத்தலைவா் திரவியராஜ் தலைமையில் மேல்நிலைத் தேக்கதொட்டி பணியாளா்கள் வழங்கிய மனுவில் தெரிவித்திருப்பது:
தூய்மைக் காவலா்கள் அரசாணை எண் 303/ நாள் 11.10.2017-ன்படி ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி பணியாளா்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பணியாளா்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 115ஐ கருவூலத்துக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.