விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நில உரிமையாளா்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டது.
நில உரிமையாளா்கள் இ-சேவை மையத்தை அணுகி கட்டணத்தை செலுத்தி, நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைபேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். நில அளவை செய்த பின்னா் மனுதாரா், நில அளவா் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடத்தை ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய வழி சேவை மூலம் மனுதாரா் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.