கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு!
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக சில நாள்களுக்கு முன்பு பேரவையில் கூறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இதுகுறித்து விவாதிக்க ஏப்ரல் 9 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
நீட் விலக்கு தொடர்பாக தமிழிக அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்றும் இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்றும் திமுக நடத்தும் கூட்டம் ஒரு நாடகம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக அரசு நடத்தும் இந்த கூட்டத்தால் ஒரு பலனும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க | 'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை