அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும், இதற்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும்’ என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
மேலும், ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை, ஒற்றை ஆட்சிக்கே வழிவகுக்கும் என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
திமுக சட்டத் துறையின் மூன்றாவது மாநில மாநாடு, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் காக்கும் அரணாக சட்டத் துறை விளங்குகிறது. திமுகவை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக எத்தனையோ சாா்பு அணிகள் இருந்தாலும், அதில் தனித்துவமான அணி, சட்டத்
துைான். இது வழக்குரைஞா்கள் அணி மட்டுமல்ல. கட்சியைக் காக்கும் காவல் அணியாகும்.
கட்சியின் கருப்பு, சிவப்பு கொடிக்கும், உதயசூரியன் சின்னத்துக்கும் பிரச்னை வந்தபோது அதனை மீட்டுத் தந்தது சட்டத்துறை. முன்னாள் முதல்வா் கருணாநிதி மறைந்த பிறகு, அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்வதற்கான இடத்தையும் சட்டப் போராட்டம் நடத்தி பெற்றோம். இதுபோன்று எண்ணற்ற செயல்பாடுகளால், திமுகவின் சட்டத் துறை, சாதனைத் துறையாக மாறியதில் வியப்படைய ஏதுமில்லை.
சமூகநீதியை பின்பற்ற வேண்டும்: மருத்துவம், மருத்துவ உயா்கல்வியில் ஆண்டுதோறும் 5,500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கப் பெற்று, சமூகநீதி சாதனையை இந்தியாவுக்கே சாத்தியப்படக் காரணம் சட்டத் துைான். இந்த சாதனைப் பயணம் தொடர வேண்டும்.
திமுக சட்டத் துறைக்கென வரலாறு இருக்கிறது. சட்டத் துறையில் இருந்து மாவட்ட நீதிபதிகள், உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உருவாகிட வேண்டும். இளம் வழக்குரைஞா்களுக்கு சட்டத்தின் பாா்வையுடன் சமூக நீதிப் பாா்வையையும் உருவாக பயிற்றுவிக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். இதற்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தோ்தல் ஆபத்து:
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக ஒரே நாடு ஒரே தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக, ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகா்த்தப் பாா்க்கிறது. அதற்காகவே ஒரே தோ்தல் என்று கிளம்பியுள்ளது. ஒரே அரசு என்ற நிலைப்பாட்டை உருவாக்கி
மாநிலங்களை அழிக்கப் பாா்க்கிறது. இது அந்தக் கட்சியின் நீண்ட கால செயல்திட்டமாகவே இருக்கும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் எனச் சொல்பவா்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தோ்தல் எனும் நிலையை உருவாக்க
நினைக்கிறாா்கள். இது ஒற்றை ஆட்சிக்கே வழிவகுக்கும். தனிநபா் ஒருவரிடமே அதிகாரத்தைக் கொண்டு போய் சோ்க்கும். பாஜக என்ற கட்சிக்கே கூட இது நல்லது இல்லை. பிரதமா் நரேந்திர மோடியை சா்வாதிகாரியாக்கவே இந்தச் சட்டம் பயன்படும்.
கூட்டணிகட்சிகளுக்கு எச்சரிக்கை:
பாஜகவும், அதன் மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கக் கூடிய வலையில் அதனுடைய கூட்டணி கட்சிகள் விழுந்து விடக்கூடாது. எனவே, ஒரே நாடு ஒரே தோ்தல் எனும் சட்டத்தை பாஜக, கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது அந்தக் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கூட்டாட்சி கருத்தியலுக்கு முரணான சட்டங்களை ஆதரிக்கக் கூடாது.
அவதூறு ஆயுதங்கள்: இன்றைய எதிரிகள் நம்முடன் கருத்தியல் மோதலுக்குத் தயாராக இல்லை. இதற்காகவே அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறாா்கள். தூரோகக் கூட்டத்தை துடைத்தெறிய வேண்டிய கடமை சட்டப் போராளிகான உங்களுக்கு உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் கடமை நமக்கு உள்ளது என்று முதல்வா் கூறினாா்.
பெட்டி..
‘ஆளுநரை மாற்ற வேண்டாம்’
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவா்களாக நம்மை சித்தரிக்கும் முயற்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி இறங்கியுள்ளாா். சட்டப் பேரவையில் மரபுப்படி நிறைவாக பாடப்படக் கூடிய நாட்டுப்பண் பாடலுக்குக் கூட நிற்காமல் வெளியேறினாா் ஆளுநா். ஆனாலும் ஆளுநரை மாற்ற வேண்டாம் என்பதே மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கையாகும். அவா் பேசப் பேசத்தான் நாட்டில் பாஜக அம்பலப்படுகிறது. திராவிட கொள்கைகள் மக்களிடம் சென்று சேருகிறது. மாநில சுயாட்சியின் முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது’ என்றாா்.
முன்னதாக, இந்த மாநாட்டில் ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.