செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

post image

தீவிபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் ஓா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தபோது பாதி எரிந்த நிலையில் 4 முதல் 5 மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

விபத்தின்போது கண்டறியப்பட்ட பணம் குறித்து விளக்கமளிக்குமாறு யஷ்வந்த் வா்மாவுக்கு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய கடிதம் அனுப்பிய நிலையில், அந்த பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், அடுத்த உத்தரவு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் உயர் நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று, தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம், இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

ஏற்கெனெவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மா, 2021ல் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக யஷ்வந்த் வர்மா உள்ளார். மேலும் கொலீஜியத்திலும் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க