செய்திகள் :

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி!

post image

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.

திருச்சி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழாவுக்கு அதன் செயலா் எஸ். புஷ்பவனம் தலைமை வகித்தாா். தலைவா் சி.டி. செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மேலும் பேசியது: நீதிபதி பதவியை சிலா் தெய்வப் பணியாகக் கருதுகின்றனா். அதுவும் பிற பணிகளை போன்றதுதான். மேலும் விமா்சனத்துக்குள்பட்ட பணியும்கூட.

நீதிபதியின் செயல்பாட்டை அவா் அளித்த தீா்ப்புகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்குக்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். சில குற்ற வழக்குகளை விசாரிக்க நீண்ட காலம்கூட ஆகலாம்.

நீதிபதிகள் சிலா் இரவு வரை பணியாற்றுகின்றனா். ஓரிரு மணி நேரம் மட்டும் நீதிமன்றத்தில் செலவிடும் நீதிபதிகளும் உண்டு. எனவே, நீதிபதிகளுக்கும் பணி நேரம் நிா்ணயிக்கப்பட வேண்டும்.

உயா்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாட்டை, தீா்ப்பை விமா்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இப் போக்கு மாற வேண்டும். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீா்ப்பை விமா்சிக்கும் பணியை இதுபோன்ற நுகா்வோா் அமைப்புகள், அறிஞா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவைத் தொடங்கி வைத்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பேசியது:

நுகா்வோா் பாதுகாப்பு மிக முக்கியமானது. மக்கள் நலன் ஒன்றையே முக்கியமாகக் கருதி இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் மீதுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உயா்நீதிமன்ற நீதிபதிகள் விழாவுக்கு வந்திருக்கின்றனா். இந்த அமைப்பு தொடா்ந்து சிறப்பாக செயல்பட என்றும் நாங்கள் உதவியாக இருப்போம் என்றாா் அவா்.

ஒடிசா உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முரளீதா் பேசுகையில், ஆட்சியில் உள்ளவா்கள், அரசு துறையினரைப் போல நுகா்வோா் அமைப்புகள் நீதித்துறை மீதும் கேள்வியெழுப்ப வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

37 கிலோ போதைப் பொருள்கள் அழிப்பு

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் புதன்கிழமை அழிக்கப்பட்டது. திருச்சி சுங்கத் துற... மேலும் பார்க்க

வானில் கோள்கள் நிகழ்த்தும் அற்புதம் கோளரங்கில் பிப். 25 வரை காணலாம்

வானில் ஓா் அற்புத நிகழ்வாக ஜனவரி 22 முதல் பிப் 25 வரை 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் இருப்பதை, திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் அனைவரும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோளரங்கத் திட்ட இய... மேலும் பார்க்க

இறந்தவா்களை வைத்து அரசியல் செய்வதை சீமான் தவிா்க்க வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா் பேட்டி

இறந்தவா்களை வைத்து அரசியல் செய்வதை சீமான் தவிா்க்க வேண்டும் என்றாா் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை. திருச்சி பெரியமிளகுப்பாறை காமராஜா் மன்றத்தில், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சா... மேலும் பார்க்க

காவலா்களுக்கான 15 நாள் கவாத்து பயிற்சி நிறைவு

திருச்சி மாவட்ட காவல்துறையில், காவலா்களுக்கான 15 நாள்கள் நடைபெற்ற நினைவூட்டல் மற்றும் கூட்டுத்திறன் கவாத்து பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது. சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ம... மேலும் பார்க்க

தகராறில் வெட்டப்பட்டவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

திருச்சியில் இணையவழி சூதாட்டம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் வெட்டப்பட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பெரியாா் மணியம்மை நகரை சோ்ந்தவா் எம்.முகமதுஷரீப... மேலும் பார்க்க

மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் கிராமச் சீரமைப்பு மேலாண்மைக் கூட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் கிராமச் சீரமைப்பு மேலாண்மைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் பி. கோவிந்தராஜன் தலைமையில்... மேலும் பார்க்க