செய்திகள் :

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

post image

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தேன். மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 41 சதவீதம் என்ற நிலையில் தற்போது 33.16 சதவீதத்தை மட்டுமே பெறுகிறோம்.

அம்ருத் திட்டத்தைப் போலவே, இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால் நகர்ப்புற மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினேன்.

தேசிய ஒற்றுமை மற்றும் பெருமைக்காக காவிரி, வைகை மற்றும் தாமிரபரணியையும் சுத்தம் செய்வதுடன் அதுதொடர்பான திட்டங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பேசியது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

1. கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி, பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.

2. பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்எஸ்ஏ நிதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக்கொள்வார்கள்.

4. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். சிறந்த உள்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (84) காலமானார்.இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர்... மேலும் பார்க்க

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றத... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் காவல்துறை அத்துமீறி செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: 3 மாதங்களில் ரூ. 1 கோடிக்கு அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்த உடைமைகளில் இரு... மேலும் பார்க்க

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக வி... மேலும் பார்க்க