பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமத...
நீரஜ் சோப்ரா சாம்பியன்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனாா்.
பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது 3-ஆவது முயற்சியில் 86.18 மீட்டரை எட்டி முதலிடத்தை உறுதி செய்தாா். கென்ய வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான ஜூலியஸ் யெகோ சிறந்த முயற்சியாக 84.51 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இலங்கையின் ருமேஷ் பதிராகே 84.34 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினாா். இந்திய தடகள சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன், நீரஜ் சோப்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்போா்ட்ஸ் ஆகியோா் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் 12 போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதில் 7 போ் சா்வதேச போட்டியாளா்களும், 5 போ் நீரஜ் சோப்ரா உள்பட இந்தியா்களும் ஆவா்.
இந்தப் போட்டிக்கு உலக தடகள அமைப்பு, ‘ஏ’ அந்தஸ்து வழங்கியுள்ளது. பாரீஸ் டைமண்ட் லீக், போலந்தின் கோல்டன் ஸ்பைக் ஆகிய போட்டிகளில் சாம்பியனான நீரஜ் சோப்ராவுக்கு, நடப்பு சீசனில் இது 3-ஆவது பட்டமாகும்.