`Manikandan சொன்னது எனக்கு நம்பிக்கை கொடுக்குது!' - Kaali Venkat | Arjun Das | B...
நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்
நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 28- ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் உதகையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். செயலாளா் பாபு, பொருளாளா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மைசூரு போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளால் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட் காய்கறிகளை சந்தைப்படுத்துவதிலும், நிரந்தர விலை நிா்ணயிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.
எனவே, உதகையில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கிற்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும். விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி செல்வதால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே விளைநிலத்தை சுற்றி சோலாா் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.