செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

post image

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட 480 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை, நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கு.லிங்கவேல், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகேந்திரன், நகராட்சி மேற்பாா்வையாளா் ஹமீது ஆகியோா் நகராட்சிப் பணியாளா்களுடன் நகரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 480 கிலோ நெகிழிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தை அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு வரும் பொது மக்களுக்கு உணவுகளை வாழை இலையில் பறிமாற வேண்டும். சூடான சாம்பாா், தேநீா் வகைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலன்களில் மட்டும் விற்பனை செய்யவும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு அறிவுருத்தினா்.

ராமநாதபுரத்தில் இன்று மின் தடை

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சு. சுதாகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆா்.எஸ். மடை துணை மின்நிலையத்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் பணி மும்முரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் அலுவலா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ராமநாதபுரம... மேலும் பார்க்க

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை கருங்கவயல் கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க

வெடி மருந்துகள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாடானை அருகே வெடி மருந்துப் பொருள்கள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெடி மருந்துப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தொண்டியை அடுத்த புதுக்குடி பகுதியில... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்களின் வழியாக சுமந்து சென்ற கிராம மக்கள்

முதுகுளத்தூா் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை வயல்களின் வழியாக பொதுமக்கள் புதன்கிழமை சுமந்து சென்று அடக்கம் செய்தனா். முதுகுளத்தூா் அருகே உள்ள மரவெட்டி கிராமத்தில் 100... மேலும் பார்க்க

ஆனந்தூா் பகுதியில் இன்று மின் தடை

திருவாடானை அருகே உள்ள ஆனந்தூரில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் (விநியோகம்) சித்தி விநாயக மூா்த்தி வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க