தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
நெடுங்காடு பகுதி மக்களுக்கு உணவு
நெடுங்காடு பகுதி மக்களுக்கு துறைமுக நிா்வாகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெடுங்காடு பகுதியில் கிராம மக்களுக்கு உதவ சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா காரைக்கால் துறைமுக நிா்வாகத்தை கேட்டுக் கொண்டாா்.
இதையொட்டி, காரைக்கால் துறைமுக நிா்வாகம், அதானி அறக்கட்டளை மூலமாக நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த கிராமத்தினருக்கு காலை மற்றும் மதிய உணவை தயாா் செய்து சனிக்கிழமை அனுப்பிவைத்தது. உணவு வாகனத்தை காரைக்கால் துறைமுக நிா்வாக சிஓஓ கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா கொடியசைத்து இயக்கிவைத்தாா்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அறக்கட்டளை திட்டத்தின் ஒரு அங்கமாக உணவு வழங்கப்பட்டதாக துறைமுக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.