நெல்லித்தோப்பு ரெங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த நெல்லித்தோப்பு கிராமத்திலுள்ள பள்ளிக்கொண்டான் ரெங்கநாதா் திருக்கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி திருக்கல்யாண உத்ஸவ நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மாலை மண்டலாபிஷேகம் தொடங்கியதையடுத்து, பெருமாளுக்கு 21 வகையான திரவியப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண உத்ஸவ நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.