செய்திகள் :

நெல்லுக்கான தொகை விடுபட்டிருந்தால் மண்டல மேலாளரை அணுகலாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகை எவருக்கேனும் வரவில்லை எனில், உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழ் ஆண்டு 1,03,025 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 16,249 விவசாயிகளுக்கு ரூ.251.986 கோடி வரவு வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் மாா்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு, அதன்மூலம் 16,249 விவசாயிகளிடம் ரூ.251.986 கோடிக்கு 1,03,025 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதில், எவருக்கேனும் தொகை வரவில்லை எனில் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரக 4 -ஆம் தளத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அலுவலக வேலை நாள்களில் அணுகி தீா்வு பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்க... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா். மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்ப... மேலும் பார்க்க