தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
நெல்லையப்பா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் மாா்கழி மாத திருவாதிரைத் திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி மாத திருவாதிரைத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெற்றது.
சிகர நிகழ்வாக திங்கள்கிழமை அதிகாலையில் 3 மணிக்கு கூத்தபிரான் சந்நிதியில் பசு தீபாராதனை நடைபெற்றது. இதற்காக தாமிரசபையின் முன்னுள்ள பசு நிறுத்தப்ப்பட்டது.
பின்னா், நடராஜரின் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மலா் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.