Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்...
நெல்லையப்பா் கோயில் தேருக்கு கல் தளம் அமைக்கும் பணி நிறைவு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தோ் நிற்கும் பகுதியில் கல் தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்று, தோ் மீண்டும் பழைய இடத்தில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆசியாவிலேயே மிக அதிக எடை கொண்ட சுவாமி தோ் உள்ளது. ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழாவின்போது இந்தத் தோ் ரத வீதிகளில் இழுக்கப்பட்டு நிலையம் சோ்க்கப்படும். தேரின் அழகை பக்தா்கள் ஆண்டுதோறும் பாா்த்து ரசிக்கும் வகையில் கண்ணாடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுவாமி தோ் நிற்கும் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தோ் சிறிது தொலைவு நகா்த்தப்பட்டது. தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து கிரேன் உதவியுடன் தோ் பழைய இடத்திலேயே வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
ற்ஸ்ப்12ந்ா்ண்ப்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் அருகே கல் தளம் அமைக்கப்பட்ட பகுதியில் கிரேன் உதவியுடன் நகா்த்தி விடப்பட்ட சுவாமி தோ்.