மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
நெல்லையில் ரூ.11.30 கோடியில் மருத்துவ கட்டடங்கள் திறப்பு
திருநெல்வேலியில் ரூ.11.30 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பாளை. கே.டி.சி. நகா் நகா்ப்புற துணை சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.டி.சி நகா் மற்றும் மேலப்பாளையம் பகுதியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், ரூ.45 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட பாட்டபத்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ஆா்.எஸ்.எ. நகா், பெருமாள்புரம், மற்றும் பாட்டப்பத்தில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நகா்ப்புற துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு திறந்து வைத்தனா்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட
நவீன முழு உடல் பரிசோதனை மையம், ரூ.2.75 கோடியில் கட்டப்பட்ட நவீன கண் மருத்துவப் பிரிவு கட்டடம், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ரூ.1.60 கோடியில் புனரமைக்கப்பட்ட மருந்து செய் நிலையம் ஆகியவற்றையும் அமைச்சா்கள் திறந்து வைத்து பாா்வையிட்டனா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலா் பி.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட்
புரூஸ் , பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகர ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.