செய்திகள் :

நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3500, கோவை ரூ. 3,700: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்...!

post image

பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜன. 14 ஆம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜன. 19 வரை 6 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஜன. 11 சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ஆயத்தமாகி வருகின்றனர்.

ரயில்கள், சிறப்பு ரயில்கள், அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?

இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் வழக்கமாக விற்பனை செய்யப்படும் தொகையைவிட பலமடக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அதிக விலைக்கு பயணச்சீட்டு விற்பனை செய்யும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக பேருந்து சேவை செயலிகளிலேயே அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரூ. 4,000 வரையிலும், மதுரைக்கு ரூ. 3,800 வரையிலும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. 3,500 வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இத்தகைய சூழலில், சென்னை பேருந்து நிலையங்கள் அருகே பண்டிகை காலங்களில் அனுமதியின்றி இயக்கப்படும் திடீர் ஆம்னி பேருந்துகளில் எவ்வளவு விலை சொல்வார்கள் என்று நினைத்தால் மனம் கலக்கம் அடைகிறது.

சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு சாதாரண நாள்களில் விமானத்தில் சென்றால்கூட இதைவிட பயணச் செலவு குறைவு என்று சென்னைவாசிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

புகார் எண்கள்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகாா்களை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றம்

துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிகளைத் திரும்பப் பெறக் கோரும் தீா்மானம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முதல்வா் ம... மேலும் பார்க்க

அவையில் இல்லாத ஐஏஏஸ் அதிகாரிகள்: அமைச்சா் துரைமுருகன் கண்டனம்

பேரவை நடவடிக்கையின்போது அவையில் அதிகாரிகள் இல்லாத நிலையில், அவை முன்னவா் துரைமுருகன் கோபத்துடன் கண்டனம் தெரிவித்தாா். சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது, அரசின் தலைமைச் செயலா் உள்பட உயரதிகாரிகள் அமா்ந்து, ... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீா்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு

துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிக்கு எதிராக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து பாஜக வெளிநடப்புச் செய்தது. பல்கலைக்கழக மானியக் குழு வரைவு திருத்த... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு!

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு ஸ்ரீரங்கம் உள்பட பெருமாள் கோயில்களில் இன்று(ஜன. 10) அதிகாலை நடைபெற்றது. ஆழ்வார் பசுரங்கள் பாராயணம் செய்தபடி சொர்க்க வாசல் வழியாக... மேலும் பார்க்க

காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு

வெளிநாட்டு மதுபான நிறுவனத்துக்கு உதவ லஞ்சம் பெற்ாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. பிரி... மேலும் பார்க்க

இரட்டை இலை வழக்கு: தோ்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டது, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க