சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலா் ஜி.மோகன பிரியா
திருநெல்வேலியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலராக ஜி.மோகன பிரியா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த சந்திரசேகா், விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, திருநெல்வேலிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஜி.மோகன பிரியா, வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளா்கள், அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.